School Annual day
புனித ஜோசப் மாடர்ன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி,
ஆலன்விளை பள்ளியில் ஆண்டு விழா:2024 – 2025அருட்பணி: ஜாண் பெனிற்றோ L. கோட்டார்மறைமாவட்டத்தின் R.C., பள்ளிகளின் கண்காணிப்பாளர் தலைமை விருந்தினராக வருகை புரிந்து குடில் மந்திரிக்கப்பட்டு, புனித ஜோசப் சமுதாயக் கல்லூரி இயக்குநர் திரு.சுஜின் மற்றும் முதல்வர் திருமதி.அனிஷா மேரி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை துவங்கி வைத்தார்.பள்ளி மாணவ மாணவியரின் கிறிஸ்து பிறப்புப்பாடல்கள் வகுப்பு வாரியாகப்பாடி அசத்தினார்கள். முதல் வகுப்பு மாணவ மாணவியர்கள் அனைவரையும் வரவேற்றார்கள். தலைமை ஆசிரியை திருமதி.ஆன்லெட் பிரபா அவர்களால் ஓராண்டு செயல்பாடுகள் அறிக்கையாக வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெற்றது. பெற்றோர் சார்பாக திருமதி.டெய்சி மோரிஸ் அவர்கள் சொற்பொழிவாற்றி மாணவ மாணவியருக்கு கேக், பிஸ்கட் வழங்கி சிறப்பித்தார்கள்.புனித லூர்து அன்னை ஆலயம், ஆலன்விளை பங்குப்பணியாளர் ஜாண் விபின் மாணவர்களின் தலைமைத்துவம் பற்றி பேசினார்கள். அவரின் துறை தலைமையின் கீழ் செயல்படும் செயிண்ட் சேவியர் கத்தோலிக்க இஞ்சினியரிங் கல்லூரி சுங்காங்கடை ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் & ரொபாட்டிக் டெக்னாலஜி (AI & ROBATHICS) பற்றி பேராசிரியை விளக்கினார்கள்.சிறப்பு விருந்தினர் செல்வி.அந்தோணியம்மாள், ரெஜினாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் சிறு வயது முதல் இந்நாள் வரை மாணவ மாணவியர் எவ்வாறு வளர்கிறார்கள், வளர்க்கப் படுகிறார்கள் என சிறந்த கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.ஆலன்விளை CSI ஆலயம் அருட்பணி J. ரெஜினால்டு சாமுவேல் B.A., BD இப்பள்ளி குழந்தைகளின் ஆங்கிலப்பேச்சாற்றல் தன்னை கவர்ந்தது என்பதை ஒரு கதை மூலம் விளக்கினார்கள்.5-ம் வகுப்பு மாணவ மாணவியர் தாஜ்மஹால் என்ற தலைப்பில் இசை நாடக வடிவில் தந்தார்கள். 4-ம் வகுப்பு மாணவ மாணவியர் சேக்ஸ்பியர் நாடகம் நடித்துக்காட்டினார்கள் மற்றும் கிறீஸ்து பிறப்பு நிகழ்வை நாட்டிய நாடகமாக கலை வடிவம் தந்தனர்.அருட்சகோதரி மார்த்தாள் FIHM, லிட்டில் ஃப்ளவர் பள்ளி வணிகவியல் துறைத்தலைவர், கிறிஸ்து பிறப்பு செய்தி வழங்கினார்கள்.மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிப்பதற்காக INTRA-SCHOOL நடனப்போட்டி நடத்தப்பட்டது அனைத்து மாணவ மாணவியரும் கலந்து கொண்டார்கள்.UKG மாணவ மாணவியர் முதலிடத்தில் வந்து DE SANTO, INTRA-SCHOOL DANCE COMPETITION ROLLING TROPHY சூழல் கோப்பை கோப்பையைய் தட்டிச் சென்றனர். 2-ம் வகுப்பு மாணவமாணவியர் 2-ம் இடமும், 1-ம் வகுப்பு மாணவ மாணவியர் 3-ம் இடமும் பெற்றனர்.விளையாட்டு, பாடல், கவிதை, ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பள்ளித்தாளாளர் டாக்டர்.ஆன்றினி சேவியர் அவர்கள் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.பள்ளி ஆசிரியைகளுடன் இணைந்து, தலைமை ஆசிரியர் செல்வி. மேரி ஸ்டெல்லா பாய் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார். விழாவின் இறுதியாக கிறிஸ்துமஸ் தாத்தா வந்து மாணவர்களுடன் நடனமாடி இனிப்புகள் வழங்கப்பட்டது. நன்றி கூறப்பட்டு, தேசியகீதம் பாட இனிதே விழா நிறைவுற்றது.


