அமிதாப் பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சவுதியில் நடந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது:
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு சவுதி அரேபியாவின் நாட்டின் பிரபலமான ஜாய் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது திரைப்படத்துறையில் வாழ்நாள் முழுமைக்கும் பங்களிப்பை அளித்ததற்காக வழங்கப்பட்டது. விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மேலும் 20 பேர் கவுரவிக்கப்பட்டனர். சவுதி ஜெனரல் என்டர்டெயின்மென்ட் அத்தாரிட்டி பல்வேறு துறைகளில் திறமையானவர்களை கவுரவிப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த விருது வழங்கும் விழாவின் மூன்றாவது ஆண்டிற்கான நிகழ்சியில் இந்த வருடம் நடிகர் அமிதாப்பச்சனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
ரியாத் பாலிவுட் சிட்டியில் உள்ள பக்கர் அல் ஷெட்டி திரையரங்கில் எம்பிசி குழுமத்துடன் இணைந்து நிகழ்ச்சி நடைபெற்றது. பாலிவுட்டின் பிக்.பி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடந்த மிகப்பெரிய விருது விழாவில் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனைக்கான ஜாய் விருதை பெற்றார். சினிமா, இசை, நாடகம் மற்றும் உள்ளிட்ட இன்னும் பல
துறைகளை சேர்ந்த சுமார் 200 கலைஞர்கள் ஜாய் விருதுக்காகப் போட்டியிட்டனர், அதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20 பேர் இம்முறை விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த ஆண்டு போட்டிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த விருது விழாவில் சவுதி அரேபிய பொழுதுபோக்கு ஆணையத்தின் தலைவர் துர்கி அலுஷேக் கலந்து கொண்டார்.
அரேபிய உலகம் மற்றும் சர்வதேச அளவில் பிரபல திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், பாடகர்கள் மற்றும் பிற கலை மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களைத் தவிர பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற திறமையாளர்கள் மற்றும் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். இவ்வளவு மதிப்புமிக்க மேடையில் இதுபோன்ற விருதைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி என்றும் அபிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.