வைரலாகும் முத்த காட்சி……

கவர்ச்சியில் எல்லை மீறிய அனிகா
மலையாளத்தில் அனிகா நாயகியாக நடித்துள்ள ‘ஓ மை டார்லிங்’ படத்தில் எல்லை மீறி துணிச்சலாக உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சியில் நடித்துள்ளார்.

தமிழில் ‘விஸ்வாசம்’, ‘என்னை அறிந்தால்’ படங்களில் அஜித்குமார் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான அனிகா சுரேந்திரன், இப்போது வளர்ந்து கதாநாயகி ஆகி இருக்கிறார். தெலுங்கில் நாயகியாக நடித்த ‘புட்டபொம்மா’ படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. மலையாளத்தில் அனிகா நாயகியாக நடித்துள்ள ‘ஓ மை டார்லிங்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ‘ஓ மை டார்லிங்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி வலைத்தளத்தை அதிர வைத்துள்ளது.

அதில் அனிகா எல்லை மீறி துணிச்சலாக உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சியில் நடித்துள்ளார். அதோடு மதுவும் அருந்துகிறார். படுக்கை அறை காட்சியிலும் நெருக்கம் காட்டி உள்ளார்.

இந்த வயதிலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டி இருப்பதை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். டிரெய்லரிலேயே இப்படி என்றால், படத்தில் எப்படி நடித்து இருப்பார் என்று பரபரப்பாக பேசி வருகிறார்கள். அனிகா கவர்ச்சியாக நடித்துள்ள புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிலர் இப்படி கவர்ச்சி நடிகையாக மாறாமல் குடும்ப பாங்காக நடித்து பெயர் வாங்குங்கள் என்று அறிவுரை சொல்லி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.