டாஸ்மாக் கடையில் கொள்ளை…………

டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை அள்ளி சென்ற கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
இரணியல் அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து ரூ.4½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அள்ளி சென்ற கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி திங்கள்சந்தை: இரணியல் அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து ரூ.4½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அள்ளி சென்ற கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடையில் கொள்ளை

இரணியல் அருகே உள்ள ஆழ்வார்கோவில் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக மைக்ே்கல் என்பவர் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்த பின்பு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலையில் பார்த்த பாது டாஸ்மாக் கடை ஷட்டர் திறந்து கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் மேற்பார்வையாளர் மைக்ே்கலுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்் வந்து பார்த்த போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

கடையின் உள்ளே இருந்த ரூ.4½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை காணவில்லை. நள்ளிரவில் கடையின் பூட்டை மர்ம ஆசாமிகள் உடைத்து மதுபாட்டில்களை வாகனத்தில் எடுத்து சென்றது தெரிய வந்தது.

2 தனிப்படை அமைப்பு

இதுபற்றி மைக்கேல் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடங்கிய பாக்சையும் மர்ம ஆசாமிகள் எடுத்து சென்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் சணல் குமார் தலைமையில் ஒரு தனிப்படையும், ஜான் போஸ்கோ தலைமையில் இன்னொரு தனிப்படையும் என 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.