கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் 7 பேர் மீட்பு

கேரளாவில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற போது கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் 7 பேர் மீட்பு
லட்சதீவு பகுதியை சேர்ந்த அப்துல் காசிம் என்பவருக்கு சொந்தமான படகில் கொச்சி துறைமுகத்தில் இருந்து லட்சதீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். படகில் இருந்த 2000 லிட்டர கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க் திடீரென சரிந்து என்ஜின் இருக்கும் பகுதியில் விழுந்ததில் படகு நிலைதடுமாறி கடல் தண்ணீர் படகினில் புகுந்தது.