கான்கிரீட் போடும் பணி மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பு

மாடத்தட்டுவிளை குதிரைபந்திவிளை சாலையில் கான்கிரீட் போடும் பணி மக்கள் பிரதிநிதிகள் நிதி ஒதுக்கீட்டில் விட்டு விட்டு நடந்து வருகிறது. அதன்படி 3 வது நிதியாக குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தனது தொகுதி நிதியில் இருந்து ரூ 9 லட்சம் ஒதுக்கி அதன் பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய இணைபங்குத்தந்தை அருட்பணி செல்வகுமார் ஜெபம் செய்து அர்ச்சித்து வைத்தார். நுள்ளிவிளை ஊராட்சி தலைவர் பால்ராஜ், துணைத் தலைவர் ராஜன், உறுப்பினர் செபஸ்தியான், மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் எட்வின் சேவியர் செல்வன், பொருளாளர் லூக்காஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாடத்தட்டுவிளை பங்கு அருட்பணி பேரவை உறுப்பினர் ஆன்றனி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், அகில இந்திய போலிங் பூத் காங்கிரஸ் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் மங்கள அல்போன்ஸ், குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் பால்துரை, வில்லுக்குறி பேரூர் தலைவர் பிரகாஷ் தாஸ், நுள்ளிவிளை ஜெகன், சகாயம், ஆன்றோ, சமூக ஆர்வலர்கள் பிரான்சீஸ் சேவியர், ரெக்ஸ்சிலின் ராஜகுமார், ஆல்பர்ட் மற்றும் அல்போன்ஸ்சாள், ஓய்வுபெற்ற ஆசிரியர் சுவாமி தாஸ், மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய அன்பிய ஒருங்கிணைய துணைத் தலைவர் எவரிஸ்டர், வக்கீல் ஜாண்போஸ்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.