பொதுமக்கள் பாராட்டு…

கடத்தப்பட்ட 2 வயது குழந்தையை இரண்டு மணி நேரத்தில் அதிரடியாக மீட்ட குமரி காவல்துறை..குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி…
பொதுமக்கள் பாராட்டு…
கன்னியாகுமரி மாவட்டம் அருகு விளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (33) இவர் தக்கலை பகுதி மணலி அருகே அவரது உறவினர் வீட்டில் இருந்த போது வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த அவரின் இரண்டு வயது பெண் குழந்தை காணாமல் போனது. உடனே அவர் இதுகுறித்து தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மாவட்டத்திலுள்ள அனைத்து பிரிவு காவல் துறையினர் குழந்தையை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசாரின் தீவர விசாரணையில் குழந்தையை கடத்தியது மணலி பகுதியை சேர்ந்த ராஜப்பன் ஆசாரி (67) என்பது தெரிய வந்தது.