ஜெபக்கூட்டம் நடத்த எதிர்ப்பு – இந்து முன்னணியினர் கைது……

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அடுத்த சிதறால் ஆனிச்சம் பகுதி விளையில் புதிதாக ஜெபக்கூட்டம் நடத்துவதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் தக்கலை டிஎஸ்பி தங்கராமன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்படாததை அடுத்து இந்து முன்னணி இயக்கத்தை சேர்ந்த 19 பேரை கைது செய்து, பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்…..