தோவாளை வட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்.

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில்,  தோவாளை வட்டம், தோவாளை வருவாய் கிராமத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (08. 02. 2023)  நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. P. N. ஸ்ரீதர், இ. ஆ. ப. , அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசுகையில்-
                  தமிழ்நாடு அரசு பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான மனுக்கள்மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாதமும் கடைகோடி வருவாய் கிராமங்களில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்கள் வாயிலாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான பயனாளிகளுக்கு உடனடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இன்று தோவாளை வட்டம், தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இரண்டாம் கட்ட சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு,  பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
 
                  இம்முகாமின் நோக்கம், அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறுவதே ஆகும். குறிப்பாக, குடிநீர் வசதி, பட்டா வழங்குதல் , பட்டா பெயர் மாற்றம் செய்தல், விதவை சான்றிதழ், முதிர்கன்னி ஓய்வூதியத்தொகை, ஆதரவற்றோர் விதவை சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்திசெய்வதே ஆகும்.
 
மேலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை  மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்தும் அவர்கள் விவசாயம் மேற்கொள்வதற்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளவும் இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம் பேருதவியாக இருக்கிறது. ஊரக பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து பொதுமக்களுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்துவதற்கான முழு முயற்சியினை மேற்கொள்ள வேண்டுமென துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்கள்  வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்வதோடு, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்க வேண்டுமென  கேட்டுக்கொள்கிறேன்.                
 
             அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் பரிசீலித்து தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டுமென துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
 
 
மேலும், இன்றையதினம் 7 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகை, முதிர்கன்னி ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம்   தலா ரூ. 1000 வீதம் வாழ்நாள் முழுவதும் வழங்கும் வகையில் ஆணை வழங்கப்பட்டுள்ளது.   வருவாய்த்துறையின் சார்பில்    4 பயனாளிகளுக்கு தனிப்பட்டா வழங்குதல்,  மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு மாதந்தோறும் ரூ. 1500/- வழங்குவதற்கான ஆணை என மொத்தம்  12 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, தோட்டக்கலை மலைபயிர்கள் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு மானியமும், மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு காண்டாமிருக வண்டு மேலாண்மை மெட்டாரைசியம் (4கிலோ ஹெக்டர்), வேர்வாடல் மற்றும் அழுகல்நோய் டிரைக்கோடெர்மா (4 கிலே ஹெக்டர்) தலா ரூ. 270/- மானியமாக வழங்கப்பட்டுள்ளதோடு,   வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு விசை உழவு இயந்திரம், உழுவை இயந்திரங்களுக்கான  மானியமும், பொதுமக்கள் அனைவரும் அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து தெரிந்து பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு. P. N. ஸ்ரீதர், இ. ஆ. ப. , அவர்கள் பேசினார்கள்.
 
முன்னதாக, தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பொதுசுகாதாரத்துறை சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. P. N. ஸ்ரீதர், இ. ஆ. ப. , அவர்கள் பார்வையிட்டார்கள்.
 
 
                நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் திரு. க. சேதுராமலிங்கம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு. இலக்குவன், தனித்துணை ஆட்சியர் (ச. பா. தி) திரு. தே. திருப்பதி, இணை இயக்குநர் (வேளாண்மை) திருமதி. ஹனிஜாய் சுஜாதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி. ஷூலா ஜாண், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி. கீதா,  மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திரு. நாகராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி. ஜெரிபா ஜி. இம்மானுவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு. ஹரிதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி. விமலா ராணி, தோவாளை வட்டாட்சியர் திரு. வினைதீர்த்தான், பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திரு. பெர்பட், வேளாண்மை செயற்பொறியாளர் திருமதி. சில்வஸ்டர் சொர்ணலதா, தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி. சாந்தினி பகவதியப்பன், தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் திரு. அ. நெடுஞ்செழியன், தோவாளை ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு. என். எம். தாணு,  வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published.