ஆலன்விளை புனித லூர்து அன்னை ஆலய பெருவிழா………..

குமரி மாவட்டம் ஆலன்விளை புனித லூர்து அன்னை ஆலயம் பங்கு குடும்ப விழா பிப்ரவரி 10 ம் தேதி துவங்கி 19 ம் தேதி வரை நடைபெறும். விழாவின் முதல் நாள் காலை 6.30 மணிக்கு முன்னோர் நினைவு திருப்பலி நடைபெறும். மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 7 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி காரங்காடு வட்டார முதல்வர் அருட்பணி மரிய ராஜேந்திரன் தலைமையில் இலந்தவிளை பங்குத்தந்தை அருட்பணி ரோமேரிக் ததேயு அருளுரையோடு நடைபெறும். 2 ம் நாள் விழாவில் காலை 6.30 மணிக்கு திருப்பலியில் திருமுழுக்கு வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி மறவன்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி ஜோசப் அருள் ஸ்டாலின் தலைமையில் புதூர் பங்குத்தந்தை அருட்பணி சேம் மேத்தியூ அருளுரையோடு நடைபெறும். 3 ம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறும். விழா நாட்களில் காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலியும் நடைபெறும். 9 ம் திருவிழாவான 18 ம் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலியில் திருமுழுக்கு கொடுக்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருள்பணி இயேசு ரெத்தினம் தலைமையில் முரசங்கோடு பங்குத்தந்தை அருட்பணி பெனிட்டோ அருளுரையோடு நடைபெறும். இரவு 8.30 மணிக்கு அன்பு விருந்து நடக்கிறது. 10 ம் நாள் விழாவில் காலை 6.30 மணிக்கு திருப்பலி, 9 மணிக்கு ஆடம்பர திருவிழா கூட்டுத் திருப்பலி குழித்துறை மறைமாவட்ட முதன்மைக் செயலர் அருட்பணி ரஸல் ராஜ் தலைமையில் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நற்கருணை ஆசீர், திருக்கொடியிறக்கம் நடைபெறும்.இரவு 7.30 மணிக்கு மாபெரும் நடனப் போட்டி நடைபெறும். முன்னதாக 8 ம் தேதி மற்றும் 9 ம் தேதி ஆகிய நாட்களில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, நற்செய்தி பகிர்வு, நற்கருணை ஆராதனை நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை ஆலன்விளை பங்கு இறைமக்கள், அருட்பணி பேரவையினர், விழா குழுவினர், பங்குத்தந்தை ( பொறுப்பு) அருட்பணி சகாய ஜஸ்டஸ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.