குமரி எஸ். எஸ். எல். சி. தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி சதவீதம்

எஸ். எஸ். எல். சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் குமரி மாவட்டத்தில் விருப்ப பாடத்தில் 23 ஆயிரத்து 141 பேர் தேர்வு எழுதியதில் 22 ஆயிரத்து 781 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 98. 44 சதவீதமாகும். இதில் மாணவர்கள் 11 ஆயிரத்து 657 பேர் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 342 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 97. 30 சதவீதம் ஆகும். 11 ஆயிரத்து 484 மாணவிகள் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 439 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 99. 61 சதவீதமாகும். ஆங்கில பாடத்தில் 11 ஆயிரத்து 657 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 598 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 99. 49 சதவீதமாகும். 11 ஆயிரத்து 484 மாணவிகள் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 474 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 99. 91 சதவீதமாகும். கணிதம் பாடத்தில் 11 ஆயிரத்து 657 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 271 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 96. 69 சதவீதமாகும். 11 ஆயிரத்து 484 மாணவிகள் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 365 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 98. 96 சதவீதமாகும். அறிவியல் பாடத்தில் 11 ஆயிரத்து 657 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 305 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 96. 98 சதவீதமாகும். 11 ஆயிரத்து 484 மாணவிகள் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 394 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 99. 22 சதவீதம் ஆகும். சமூக அறிவியல் பாடத்தில் 11 ஆயிரத்து 657 பேர் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 416 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 97. 93 சதவீதமாகும். 11 ஆயிரத்து 484 மாணவிகள் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 409 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 99. 35 சதவீதம் ஆகும். விருப்ப பாடத்தில் 48 மாணவர்கள் தேர்வு எழுதி 48 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 102 மாணவிகள் தேர்வு எழுதியதில் 102 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 100 சதவீதம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.