அனுமதியின்றி செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கலுங்குநடை பகுதியில். கொல்லங்கோடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் அனுமதியின்றி செம்மண் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சாலை ஓரத்தில் டெம்போவை நிறுத்திய ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். டெம்போவை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.