சாலை பாதுகாப்பு வார விழா

சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 11-ந் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நாகர்கோவில் கோட்டார் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் நாகர்கோவிலில் ஹெல்மெட் அணியாமல், லைசென்ஸ் இல்லாமல், ஒரு வழிப்பாதை விதிமுறையை மீறி இரு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் 125 பேரை பிடித்து வடசேரி அண்ணா சிலை அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவுரை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இன்ஸ் பெக்டர் அருண் கூறியதாவது :-
இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து ஓட்ட வேண்டும். இதன் மூலம் உயிரிழப்புகளை தடுக்கலாம். லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது. ஒரு வழிப்பாதை விதிமுறையை மீறி வாகனங்களை ஓட்டக்கூடாது. சாலையில் வாகனங்கள் ஓட்டும்போது கட்டாயம் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.