ஆழ்வார்கோயலில் குளச்சல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது

நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி சார்பில் பொங்கல் கொண்டாட்டம் 2023 நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக இரணியல் பேரூராட்சி ஆழ்வார்கோயில் பகுதியில் மாவட்ட அளவில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. 14 அணிகள் கலந்து கொண்டு முதல் பரிசாக ரூபாய் 5000/- மற்றும் கோப்பையும் பரசேரி A அணியும், இரண்டாம் பரிசாக ரூபாய் 3000/- மற்றும் கோப்பையும் பரசேரி B அணியும் மூன்றாம் பரிசாக ரூபாய் 2000/- மற்றும் கோப்பையும் நெட்டாங்கோடு அணியும் நான்காம் பரிசாக ரூபாய் 1000/- மற்றும் கோப்பையும் வீரத்தமிழர் கபடி அணியும் பெற்றனர்.
முதல் பரிசை நாம்தமிழர் கட்சி கப்பியறை பேரூராட்சி 1வது வார்டு உறுப்பினர் சகோதரி ஆன்சி சோபா அவர்கள் வழங்கினார்
இரண்டாம் பரிசை நாம்தமிழர் கட்சி கல்லுக்கூட்டம் பேரூராட்சி 10 வது வார்டு ரூபன் பொன்னுமணி B.Tech (IT) கவுன்சிலர் வழங்கினார்.
மூன்றாம் பரிசை நாம்தமிழர் கட்சி இரணியல் பேரூராட்சி 1வது வார்டு உறுப்பினர் தம்பி சுரேஷ் வழங்கினார்
நான்காம் பரிசை நாம்தமிழர் கட்சி குளச்சல் தொகுதி செயலர் திரு. ஜாண் பீட்டர் வழங்கி சிறப்பித்தார்.
ஆட்ட நாயகன் விருது தொகுதி துணை தலைவர் திரு. கேபா அவர்களால் வழங்கப்பட்டது.