மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை……..

நாகர்கோவில் மணக்குடி சாலையில் வெள்ளடிச்சிவிளை அருகே மற்றும் குளத்துவிளையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் நிலை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.75 லட்சம் செலவில் 4 சிறிய பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. குளத்துவிளையில் நடந்து வரும் பாலப் பணியை நாகர்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் முத்துராமன் பார்வையிட்டார். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இந்தப் பணியை விரைந்து முடிக்க அவர் கோரிக்கை வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.