திருவட்டார் போலீஸ் நிலையத்தில் எஸ். பி. திடீர் ஆய்வு…..

குமரி மாவட்ட எஸ். பி. ஹரி கிரண் பிரசாத் ஒவ்வொரு போலீஸ் நிலையம் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன் அடிப்படையில் திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு நேற்று வருகை தந்தார். அவரை இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வரவேற்றார். அவருடன் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் உடன் இருந்தார். போலீஸ் நிலையத்தில் தினசரி வரும் புகார்களை முறையாக பதிவு செய்து பராமரிக்க வேண்டும். போலீஸ் நிலையத்தை தினசரி சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். புகார் கொடுக்க வரும் நபர்களிடம் கனிவுடன் நடந்துக்கொள்ள வேண்டும். போலீஸ் நிலையத்தின் முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள செடிகள் அழகாக வைக்கப்பட்டுள்ளது. அதை இன்னும் நல்ல முறைக்கு பராமரிக்க வேண்டும் என்று கூறினார். போலீசாரின் குடியிருப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர்களிடம் குறைகளையும் கேட்டு அறிந்தார். அதன் பிறகு சுற்றுலா தலமான மாத்தூர் தொட்டில் பாலத்துக்கு சென்றார். அங்கு சுற்றுலா வந்த பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு களை வழங்கி அவர்களிடம் அறிவுரைகளை வழங்கி னார். மாத்தூர் தொட்டில் பாலத்தின் பல பகுதிகளை சுற்றி பார்த்தார்.

Leave a Reply

Your email address will not be published.